தமிழ்நாட்டை மாவட்டமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி.. இணையத்தை முடக்கி கொண்டிருக்கும் வைரல் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


கமிஷன் பெறுவதற்காகவே பசுமைவழிச் சாலைத் திட்டம் அமைக்கப்படுகிறது என்று கூறுவது பச்சைப் பொய் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் 70 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 70 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் பெறுவதற்காகவே பசுமைவழிச் சாலைத் திட்டம் அமைக்கப்படுகிறது என்று கூறுவது பச்சைப் பொய் என்று கூறினார்.

பின்னர் ஸ்டாலின் குறித்து பேசிய முதல்வர் பழனிச்சாமி, செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக மட்டும்தான் என்றும், எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதை முறியடிக்கும் வல்லமை படைத்தது அதிமுக அரசு என்றும் கூறிய முதல்வர் பழனிச்சாமி, கடந்த ஓராண்டில் மட்டும் 31,000 போராட்டங்களை எதிர்கொண்டு நீர்த்துப் போக செய்துள்ளோம் என்று கூறினார்.

அப்போது தமிழ்நாட்டில் என்று கூறுவதற்கு தமிழ்நாடு மாவட்டத்தில் மட்டும் 31,000 போராட்டங்கள் நடந்துள்ளது என்று வாய் தவறி கூறியுள்ளார். அந்த பேச்சை மட்டும் தனியாக வெட்டி எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். அந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm-edappadi-palaniswamy-talks-about-mk-stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->