ஏ.டி.எம். கார்டு வடிவில் வைக்கப்படும் அடுத்த குறி..? பல ஆயிரங்களை தொடர்ச்சியாக இழக்கும் பொதுமக்கள் - அதிர வைக்கும் மோசடி.! - Seithipunal
Seithipunal


ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டுபணம் பறிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்என்று போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருமலைச்சாமி . இவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் தன்னை தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி கிளையின் மேலாளர் என்று அறிமுகம் செய்து, பின்னர் இந்த டிசம்பர் மாதம்31–ம் தேதியுடன் வங்கி கணக்கு ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிடும்.அதற்கு பதிலாக புதிய கார்டு வழங்கஉள்ளோம்.

எனவே, தற்போதுள்ள ஏ.டி.எம். கார்டு எண், அந்த அட்டையின் பின்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை கேட்டுஉள்ளார். இதை நம்பிய திருமலைச்சாமி ரகசிய எண்களை மறுமுனையில் பேசியவரிடம் கூறிவிட்டார்.

மேலும் சிறிது நேரத்தில் ஓ.டி.பி. எனப்படும் ஒருமுறை பயன்படும் ரகசிய எண் வரும், அதையும் கூறுங்கள் என்று மர்ம நபர் கேட்டு அந்த எண்ணையும் பெற்று உள்ளார். சிறிது நேரத்தில் திருமலைச்சாமியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3 ஆயிரம் எடுக்கப்பட்டது.

அந்த கணக்கில் ஏதோ ஒரு பொருள் வாங்கியதாகவும் குறுந்தகவலும் வந்தது. இதுதவிர அவருடைய மற்றொருவங்கி கணக்கு ஏ.டி.எம். ரகசிய எண்களையும் பெற்று அதிலும் ரூ.1,000 எடுத்து உள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குசென்று விவரத்தை கேட்டபோது, தங்களது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று பதில் அளித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திருமலைச்சாமி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில், போலீசார் மோசடி கும்பல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி. அருண்சக்திகுமார் கூறுகையில், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணுக்கு வரும் மர்ம அழைப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாதந்தோறும் பணம் தருகிறோம், அதற்கு முன்பணம் செலுத்துங்கள், வங்கி ஏ.டி.எம். கார்டு எண்ணை கூறுங்கள் என்று கேட்பார்கள். ஆனால் அதை பொதுமக்கள் நம்பிவிடக்கூடாது.

எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரிடமும் தங்களது ரகசியஎண்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இதுதொடர்பாக நெல்லைமாவட்டம் முழுவதும் காவல்நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Civilians alert: ATM Listen to the card number Police Officer Warns


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->