ஒரு நிறுவனம்! 5000 பேர் ! 15 கோடி! மொத்தமாக சுருட்டிய நிறுவனம்! ஏமாந்த தென் தமிழக மக்கள்! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு, ராஜபாளையத்தில், நிதி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். அதன்படி, மாதம் தோறும், 100, 200  என செலுத்தி, 5 வருட முடிவில், பெரிய தொகை வட்டியுடன் தரப்படும், என்று ஆட்களைச் சேர்த்தார்.இதனை நம்பி, ஏழை எளிய மக்கள் முதற் கொண்டு, நிறைய பேர், இந்த நிறுவனத்தில், மாதம் தோறும் பணம் கட்டி வந்தனர். 

இதனால், பணம் கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட, நெல்லை மாவட்டம் பாபநாசத்திலும், ஒரு கிளையைத் துவக்கினார். அங்கும் ஏராளமானோர், இவரது நிதி நிறுவனத்தில் மாதம் தோறும் பணம் கட்டி வந்தனர். 2018 பிப்ரவரி மாதம் வரை, 5000 பேரிடம், ராதாகிருஷ்ணன், 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.

பலர், முதிர்வு காலம் நெருங்கியதால், பணம் கட்டிய அனைவரும் தங்களது பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். அதற்கு ராதாகிருஷ்ணன், அனைவருக்கும் பிப்ரவரி மாதம் பணம் கொடுத்து விடுவேன், என்று உறுதி அளித்துள்ளார். மேலும், அந்த நிதி நிறுவனம் வழங்கிய பத்திரங்களை எல்லாம், ஒப்படைக்கும் படி கூறி உள்ளார். இதனை நம்பி, அனைவரும், பத்திரங்களைக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

அதற்கு, ஒப்புகை ரசீது ஒன்றை மட்டும் வழங்கி உள்ளார். பின், பிப்ரவரி, 20-ஆம் தேதி, இரண்டு நிறுவனங்களையும் மூடி விட்டு, செல்போன் நம்பரையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டு, தலைமறைவாகி விட்டார், ராதாகிருஷ்ணன். இதனால், அவரைத் தேடி அலைந்தவரகள், இறுதியாக, அனைவரும் ஒன்று சேர்ந்து, விருதுநகர் பொருளாதார குற்றவியல் காவல் நிலையத்தில், ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது நிதி நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chit fund company cheated common people in south tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->