கும்கி யானைகளுடன் கொஞ்சி விளையாடும் சின்னத்தம்பி.! காட்டுக்குள் கொண்டு விட கதறும் வனத்துறையினர்., மறுக்கும் சின்னத்தம்பி.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சின்னத்தடாகம், பெரிய தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், சோமையனூர், தாளியூர், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் சின்னத்தம்பி மற்றும் விநாயகன் ஆகிய 2 காட்டுயானைகள் ஆறு மாதங்களாக சுற்றித்திரிந்து விவசாய நிலங்களை பெரிதும் சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்ட நிலையில், காட்டு யானைகளை பிடிக்க கூறி கிராமத்தினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி சின்னத்தம்பி யானையை பிடிக்க சலிம், முதுமலை,விஜய், சேரன் என்ற நான்கு கும்கிகளின் உதவியுடன் வனத்துறையினர் மருத்துவர்கள் காவலர்கள் என 50 பேர் விடிய, விடிய போராடி துப்பாக்கி மூலம் அதற்கு மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பியை  பிடித்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றப்பட்ட  சின்னதம்பி யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை, டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜி.பி.எஸ். கருவி மூலம் அதன் நடமாட்டம், உடல் நலம் போன்றவை கண்காணிக்கப்பட்டு வந்தது.                                                                                                                                              

வரகாளியாறு வனப்பகுதியில் சுற்றி திரிந்த சின்னதம்பி நேற்று முதல் சின்னத்தம்பி மெதுவாக நடந்து ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிப்பட்டினம் என்ற ஊரை நோக்கி வந்தது. இதனை வனத்துறையினர் ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்தனர்.பின்னர் இதுகுறித்து அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர். மேலும் தகவல் அறியாத சிலர் வெளியே வந்த நிலையில், சின்னத்தம்பி கண்டு அலறி அடித்து ஓடியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொள்ளாச்சி வனத்துறையினர் காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 50 கிமீ ஓடிய சின்னத்தம்பிக்கு உணவு, நீர் எதுவும் இல்லாத காரணத்தினால் சோர்வடைந்தது. அதனால் மடத்துக்குளம் பகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் சின்னத்தம்பி யானை மன  உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விரைவில் எவ்வித பாதிப்புமின்றி கும்கி யானையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவதாக கூறியதால், பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளைப்பியது. மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பவே இரு கும்கி யானைகள் மூலம் நடவடிக்கை ஈடுப்பட்டு வருகிறது.

சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்டுவதற்காக வரவழைக்கப்பட்ட கும்கி யானைகளை தனது தோழர்களாக மாற்றி., கும்கி யானைகளுடன் விளையாடி மகிழ்ந்து வருகிறது சின்னத்தம்பி. சின்னத்தம்பியை அடர்த்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று விடமுடியாமல் பெரும் தவிப்பில் இரவு பகல் தூக்கம் இல்லாமல் காவல் துறையினர் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்ததாவது., சின்னத்தம்பி கும்கி யானைகளுடன் நன்றாக பழகி விளையாடிக்கொண்டு வருகிறது., சின்னத்தம்பிக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் இங்கு இருப்பதால்., இந்த இடத்தை விட்டு செல்வதற்கு மறுத்து வருகிறது. பொதுமக்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்படுத்தவில்லை. சின்னத்தம்பிக்கு தேவையான அனைத்தும் இங்கு இருப்பதால் காட்டிற்குள் செல்ல மறுக்கிறது என்று தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinnathambi not going forest play with kumki


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->