வனத் துறையினருக்கு தண்ணி காட்டும் சின்னதம்பி….!  24 மணி நேரமும், பின்னாலே செல்லும் வனத்துறையினர்….! - Seithipunal
Seithipunal


 

வனத்திலிருந்து ஊருக்குள் வந்து, பின் கும்கி யானைகளின் உதவியுடன் டாப்சிலிப் காட்டில், விடப்பட்ட சின்னதம்பி யானை, ஊருக்குள் தனக்கு கிடைத்த வசதிகளை எண்ணி, மீண்டும் மறு நாளே மீண்டும் ஊருக்குள் வந்தது.

துவக்கதில், இந்த சின்னத்தம்பி யானைக்கு, ரசிகர் மன்றம் வைக்கும் அளவிற்கு, தெருவெங்கும் போஸ்டர் ஒட்டி, வரவேற்பு தந்தார்கள். ஆனால், சின்னதம்பி, கரும்பு காடு, தோட்டத்திற்குள் எல்லாம் சென்று, பயிர்களை துவம்சம் செய்ததும், இந்த யானையை முதல்லே விரட்டுங்க, என்று ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கினர்.

பின், வனத் துறையினரின் முயற்சியால், சின்னதம்பி, தன் இடத்திலிருந்து, பழனிக்கு வந்தது. சுவாமிநாதபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

இதனை அறிந்த பழனி பகுதியில் உள்ள வனத்துறையினர், 30-க்கும் அதிகமானோர், சின்னதம்பியை பட்டாசு போட்டு, விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர், சின்னதம்பியின் பின்னாலே சென்று, விடிய விடிய பட்டாசுகளை வெடித்தனர். இதனால், அங்கிருந்து 1 கி.மீ். துாரத்தில் உள்ள திருப்பூர் மாவட்டம் கண்ணாடி புதுாரில் உள்ள கரும்புத் தோட்டத்தில், தனக்கு வேண்டிய உணவினை உண்டு, அங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

யானையை யாரும் தொந்தரவு செய்யாமல், அதன் போக்கிலே விட்டு, வனத்திற்குள் சென்று விட்டு விட, வனத் துறையினர் கடினப் பிரயாசை மேற் கொண்டுள்ளனர்.

சின்னதம்பியைக் கண்டு, தங்கள் செல்போனில் படம் பிடிக்கவும் ஒரு கூட்டம் அதன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chinnathambi elephant's travel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->