சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு.! தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் பள்ளிபடை, சி.கொத்தங்குடி கிராம ஊராட்சி ஆகிய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் தில்லையம்மன் ஓடை செல்கிறது. இந்த வழித்தடங்களில் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை காலிசெய்யுமாறு பொதுமக்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யவில்லை என்றால் அவைகள் இடிக்கப்படும் என ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுமக்கள் காலி செய்யாததால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்கு இன்று வந்தனர்.

இதனால் அங்கு, எஸ்பி  விஜயகுமார் உத்தரவின் படி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்க இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. அந்த பகுதி பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசப் போகிறோம் என்று கூறினர். 

இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நோக்கி சென்று, தொகுதி எம் எல் ஏ  பாண்டியனை முற்றுகையிட்டு, அவரிடம் நாங்கள் வீடுகளை காலி செய்யமாட்டோம், எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram people blockaded MLA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->