#BigBreaking: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இபிஎஸ்-ஐ விசாரிக்க கோரி மனு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் பெண்களின் பெயர்கள் வெளியிட்டது. குறித்து அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலாளரிடம் விசாரணை செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது

மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

குறிப்பாக அந்த மனுவில் "பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது மட்டுமே குற்றச்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கவில்லை. சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

அதேபோன்று அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமைச் செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழக முதல்வரின் முகவர் துறையிடம் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ரூ.50,000 அபரதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC dismissed petition request investigate eps in pollachi case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->