சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை பெருநகர் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை போன்ற இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வருகின்ற வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியில் திருப்பி விடப்படும். 

அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக திருப்பி விடப்படும். ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் சென்றடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai traffic change 2 days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->