சென்னை - இந்தோனேசியா நேரடி விமான சேவை - எப்போது? - Seithipunal
Seithipunal


சென்னை - இந்தோனேசியா நேரடி விமான சேவை - எப்போது?

சென்னையில் இருந்து இந்தோனேசியா நாட்டிற்கு செல்லும் பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலமாக இந்தோனேசியாவிற்கு சென்று வந்தனர். இதுவரைக்கும் இந்தோனேசியா நாட்டிற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. 

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியா நாட்டிற்கு தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை வருகின்ற 11-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. 

அதன் படி, இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து தினமும் மாலை போயிங் 738 ரக விமானம் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடைகிறது. பின்னர் சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 2.30 மணிக்கு மீண்டும் மேடான் நகருக்கு சென்று அடைகிறது. 

இந்த விமான சேவை குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: "இந்தோனேசியாவின் மேடான் நகர் அருகே உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான சுமித்ரா தீவு உள்ளது. இந்தத் தீவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai to indonesia flight service start coming elevan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->