சென்னை சூப் கிங்ஸ் அணி வெளியிட்ட அதிரடி வீடியோ!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. தற்பொழுது 12வது சீசன் ஆரம்பித்துள்ளது. முதல் கட்டமாக சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.

இதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நேற்றும் ஐபிஎல் நடைபெற்றது. சென்னை அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன்சிங் போட்டி முடிந்த பின்னர் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அது வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. அதில் ஆர்சிபி அணியை வெகுவாக கலாய்த்து வெளியிட்டிருந்தார். அடுத்த கட்டமாக சென்னை அணியின் அடுத்த விளையாட்டு மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் அவர்களது பயணத்தின் போது நடந்த விளையாட்டுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் கேப்டன் தோனியின் மனைவி மற்றும் மகளும் இடம் பெற்றுள்ளனர்.



ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai super kings released video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->