சென்னையில் பரபரப்பு.. பயிற்சி டாக்டர் கழுத்தில் குத்திய நோயாளி.. ஸ்டிரைக்கில் குதித்த டாக்டர்கள்..!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பாலாஜி என்ற உள்நோயாளி தனது கையில் போடப்பட்டிருந்த ஊசியை அகற்ற கோரி மருத்துவர் சூர்யா உடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மருத்துவப் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக் கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் சூர்யா அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திடீர்வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறியதோடு, உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் குற்றவாளி ஒருவர் பெண் பயிற்சி மருத்துவரை கத்தரிக்கோலால் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதே பாணியில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai rajiv gandhi govt hospital practitioner stabbed in neck by patient


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->