2015ம் ஆண்டு சென்னை பெருமழை சம்பவத்திலும் ஏதோ வில்லங்கம்..? இது வரை சட்டபேரவைக்கு வராத தணிக்கை அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட போது, செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்ட காரணத்தால், சென்னையை சுற்றியிருக்கின்ற புறநகர் பகுதிகள் எல்லாம் மூழ்கி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடமைகளை இழந்த நிலை அனைவருக்கும் தெரியும்.

இந்த டிசம்பர் வெள்ளம் குறித்து இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை தலைவர் “சிறப்பு தணிக்கை அறிக்க” (Special Audit Report) தயார் செய்து ஜூன் 2017 அளித்துள்ளார்.

அரசியல் சட்டப் பிரிவு 151(2)-ன்படி “இந்திய தணிக்கை மற்றும் கணக்கு” துறையின் அறிக்கை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதிகள் 207(1)ன்படி அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஆனால் இந்த அறிக்கைகளை சட்டமன்றத்திலும் வைக்காமல், பொதுக்கணக்குக் குழுவின் பரிசீலனைக்கும் அனுப்பாமல் அரசியல் சட்டம் மற்றும் சட்டமன்ற நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

இது குறித்து சட்டபேரவையில் கேள்வி எழுப்பிய  ஸ்டாலின், "இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அளித்த சிறப்பு தணிக்கை அறிக்கை ஏன் இன்னும் சட்டமன்றத்தில் வைக்கப்படவில்லை?

டிசம்பர் வெள்ளப் பணிகளை கையாண்டது குறித்து அரசின் மீது கடும் விமர்சனங்கள் அந்த அறிக்கையில் இருப்பதால் சட்டமன்றத்தில் வைக்கப்படவில்லையா..? " என்று கேள்வி எழுப்பி உள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai rainfall report Assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->