அதிரவிட்ட பெட்ரோல் பங்க் பயங்கரம்! ஒருவர் பரிதாப பலி! பங்க் உரிமையாளர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக சைதாப்பேட்டையின் கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரையின் கீழ் இரு சக்கர வாகனத்துடன் பலர் மழைக்காக ஒதுங்கி நின்றனர். 

அப்போது பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேற்கூறையின் கீழ் சிக்கிக்கொண்டனர். விபத்தில் சிக்கியவர்களின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிலரை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மேற்கூறையின் அடியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பிறகு அங்கிருந்து வெவ்வேறு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி உயிரிழந்ததை அடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக் குமார் , மேலாளர் வினோத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பெட்ரோல் பங்கை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதற்கு சீல் வைத்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai petrol bunk sealed and owners arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->