சென்னையில் இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்: அடுத்து ஆகஸ்ட் மாதம் அரங்கேற இருப்பது..? - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று நிழல் பூஜ்ஜிய நிகழ்வு  நிகழ்ந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் செய்து பார்த்தனர் வியப்பில் ஆழ்ந்தனர்.

வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும்.

அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு தெரியாது.

இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என குறிப்பிடுகின்றனர். இவ்வாறு சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினை நிழல் இல்லாத நாள் என்று கூறுவர்.

பூமி தனது அச்சில் சுற்றிக் கொண்டே சூரியனைச் சுற்றி வருகிறது. மார்ச் மாதம் பூமி யின் அச்சு சூரியனை நோக்கி சாயாமல் பக்கவாட்டில் இருப்பதால் பூமத்திய ரேகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மார்ச் 20 முதல் நிழல் இல்லாத நாள் தொடங்குகிறது.

ஜுன் 21-ல் பூமி தனது அச்சில் அதிகபட்சமாக 23.5 டிகிரி சாய்வதால் கடகரேகைக்கு அருகே இருப்பவர்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடங்குகிறது.

அந்த வகையில் இன்று, சென்னை மற்றும் பெங்களூரில் நிழல் இல்லா நாளை மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

பெங்களூரு ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு அறிவியல் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்று சரிகாக 12.17 மணியளவில் நிழல் பூஜ்ஜியமாகும் நிகழ்வை கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்வு ஆக்ஸ்ட் 18ம் தேதி மீண்டும் நடைபெறும் என்று ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai-people-today-observed-the-zero-shadow-day


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->