சென்னை மக்களே உடனே முந்துங்கள்.. இன்று இரவு உடன் முடிகிறது இலவசம்.!! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். மேலும், முதல்முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து விமரிசனம் செய்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி அவர்கள், 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல்-டி.எம்.எஸ். வரையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். 

பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட மெட்ரோ ரயிலில் 10.2.2019 மாலை 6 மணி முதல் நாளை 11.2.2019 இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக இன்று (12.2.2019) மேலும் ஒரு நாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை மெட்ரோ ரெயிலில் 2 வழித்தடத்திலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை மெட்ரோ ரெயிலில் 2 லட்சத்து ஆயிரத்து 556 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இன்றும் நாள் முடிவில் 3 இலட்சத்துக்கும் அதிமான பேர் இலவசமாக பயணிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

chennai metro free today


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...


செய்திகள்Seithipunal