ஸ்தம்பித்த தமிழகம்.! குவிக்கப்பட்ட காவல் துறையினர்.!! பதற்றத்தில் பொதுமக்கள்., ஏற்பட்ட இழப்பு.!!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும்., புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறவும்., பொதுத்துறையின் பங்கு விறபனையை கைவிட வேண்டும் என்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் ஊழியர்கள் நாளை (8 & 9) மற்றும் நாளை மறுநாள் நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர்கள்., போக்குவரத்து தொழிலாளர்கள்., வங்கி ஊழியர்கள்., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.யு.சி.சி., எஸ்.இ.டபிள்யூ மற்றும் எல்.பி.எப் போன்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஆதரவு தெரிவித்திருந்தது. 

இந்த போராட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்ற சுமார் 15 இலட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்., இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநில அரசின் ஊழியர்கள்., அரசு ஆசிரியர்கள்., வங்கி மற்றும் பொதுத்துறை ஊழியர்கள்., போக்குவரத்து கழக பணியாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும்., தமிழக அரசின் டாஸ்மாக் பணியாளர்களின் சங்கம்., டாஸ்மாக் ஊழியர்களின் மாநில சம்மேளனம்., மின்வாரிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.  

அந்த வகையில் தமிழகத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் அரசு பணியாளர்கள்., 9 இலட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன் சேர்ந்து மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு வங்கி ஊழியர்களும் ஆதரவு தெரிவித்ததால்., சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காசோலை பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரை தவித்து மீதமுள்ள அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபடுவதால்., தமிழகம் முழுவதுமாக பேருந்து சேவையானது முடங்கும் என்று அறிவிப்பு வெளியான நிலையில்., தற்போது தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு அதன் மூலமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும்., ஆட்டோக்கள் எதிர்பார்த்த அளவை விட குறைவான அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் சிரமத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். 

வங்கிகளை பொறுத்த வரையில் சுமார் 50 ஆயிரம் பரிவர்த்தனைகள் தடையாகியதால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது., அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்டுகிறது. முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்., மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதித்து அரசிற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai is totally closed due to central govt employees strike


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->