எந்திரத்தில் சிக்கிய தொழிலாளியின் கால் வெட்டி எடுக்காமல் காப்பாற்றப்பட்டது - தமிழகத்தில் படைக்கப்பட்ட சாதனை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது சுரேஷ் பவர் டிரில் எந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது இடது பாதம் நசுங்கிக் கடுமையான காயம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் அவரது காயத்தைச் சுத்தப்படுத்திப் பல கம்பிகளைப் பொருத்தினர்.

இதனைத் தொடர்ந்து நோயாளி பாதப் பகுதியின் மேல் மற்றும் கீழ்ப் பகுதியில் பெருமளவு சருமத் தசை வளர்ந்ததுடன், ரத்தத்தில் உயிர் வாழும் நச்சுக் கிருமிகளும் பெருகின. உயிரைக் காப்பாற்ற நோயாளியின் பாதத்தை வெட்டி எடுக்க ஆலோசனை அளிக்கப் பட்டது.

பயந்துபோன நோயாளி உடனடியாக சென்னையில் உள்ள மருத்துவமனையை அணுகினார். அங்குள்ள மருத்துவர் குழு அவரை முழுமையாகப் பரிசோதித்த பின்னர் பாதத்தை வெட்டி எடுக்காமலிருக்க அறுவை சிகிச்சை தேவைப் படும் என்று வலியுறுத்தினர்.

இது பற்றி அம்மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் வி டி எஸ் அருள் சிவக்குமார் கூறுகையில் ‘நோயாளியைப் பரிசோதித்த பிறகு உடனடியாக அறுவை சிகிச்சையைச் செய்தோம்.

காயத்தைச் சுத்தப்படுத்திப் பல்வேறு கம்பிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பத்துடன் இறந்துபோன திசுக்களிலிருந்து வெளிப் பொருள் களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதே நாளில் காயத்தை மூட வேக்யூம் அசிஸ்டெட் மற்றும் விஏசி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவரது பாதத்தை வெட்டி எடுக்காமல் காப்பாற்றினோம்’ என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hospital medical record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->