தமிழக அரசை வெளுத்துவாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்..! தமிழக அரசின் நடவடிக்கை என்ன?! குழந்தைகள் கடத்தல் தொடர்பாக..! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் கடத்தல் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை எஸ்பிளனேடில்  சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்த 8 மாத ஆண் குழந்தை ராகேஷ் மற்றும்  9 மாத குழந்தை சரண்யா கடத்தல் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது,   குழந்தைகள் கடத்தல் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக தமழ்நாடு போலீஸ்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் தமிழக அரசு சார்பில், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நிதியம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 2 பேருக்கும் தலா ரூ.10000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது: 

குழந்தைகள் கடத்தப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும், காவல் துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைதான் என்ன? என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் காவல்துறை தீவிரம் காட்டாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும், இதுவரை எத்தனை வழக்குகள் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது?, எத்தனை வழக்குகளில் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்? என முழு அறிக்கையை  வரும் 24-ஆம் தேதி தமிழக அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்து. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High court Condemned Tamilnadu Police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->