சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கட்டட விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை சென்னை கந்தன்சாவடியில் மருத்துவமனை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, கட்டுமான நிறுவனத்தின் மீது, கவனக்குறைவாக இருந்து விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டட இன்ஜினியர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரை தரமணி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''சாரம் சரிந்து விழுந்து உயிரிழந்த ஒடிசாவை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பப்லுவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் 28 தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்.'' தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai building accident tn cm new order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->