தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 11.58 மணி நேரத்தில் சென்னை சிறுவன் நிகழ்த்திய உலக சாதனை..? - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்த சிறுவன் பாக் நீரிணையை 11.58 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பாக்கு நீரிணை தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். மேட்டுப்பாங்கான ஆதாம் பாலம் இதனை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

இது 53 முதல் 80 கி. மீ  அகலம் உடையது. இந்த நீரிணைக்கு மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுனராக இருந்த சர் இராபர்ட் பாக் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.

இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான திட்டம் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

இத்தகைய உலகச்சிறப்பு மிகுந்த பகுதியான பாக் நீரிணையை 11.58 மணி நேரத்தில் நீந்தி கடந்து சென்னை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள தொலைவை 11.58 மணி நேரத்தில் கடந்து ராஜ ஈஸ்வர பிரபு என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai boy made historical record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->