சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்தன.!! மீம் கிரியேட்டர்கள் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


 

சென்னை விமான நிலையமானது இந்தியாவின் பன்னாட்டு விமான நிலையத்தில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் இருக்கும் கண்ணாடி தற்போது வரை தொடர்ந்து பல முறை உடைந்து விபத்திற்குள்ளானது. 

அந்த வகையில்., தற்போது நேற்று நள்ளிரவில் திடீரென கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதனை கண்ட பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் உள்நாட்டு புறப்பாடு பகுதியில் இருக்கும்., மூன்றாவது நுழைவு வாயிலில் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தது. 

உடைந்த கண்ணாடிகள் சுமார் 4 அடி நீளமும்., 7 அடி உயரமும் கொண்டதாக இருந்தது. நல்ல வேலையாக அந்த இடத்தில் பொது மக்கள் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடைந்த கண்ணாடிகளை அங்கிருந்த விமான நிலைய பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். 

இந்த சம்பவம்  குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

English Summary

CHENNAI AIRPORT GLASS ACCIDENTSeithipunal