தப்பித்தது கடலூர் உட்பட 4 மாவட்டங்கள்.! வெளியானது திடுக்கிடும் தகவல்.!! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு அதிரடி பதில்..!!! - Seithipunal
Seithipunal


தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நாடாளுமன்றத்தில் தருமபுரி நாடாளுமன்ற அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் சென்னை சேலம் எட்டு வழி சாலைக்கான சுற்றுசூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையே இன்னும் மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திற்கு வரவில்லை என்று கூறி அதிரவைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் இயக்குனர் இன்னும் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தை முன்னின்று செயல்படுத்த ஒப்புக்கொண்டிருந்த நாகார்ஜுனா குழும நிறுவனங்களில் ஒன்றான நாகார்ஜுனா கடலூர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் திவாலாகி விட்ட நிலையில், தமிழகத்தில் இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், இந்த திட்டத்தினால் காவேரி பாசன விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அன்புமணி கூறினார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், தமிழகத்தில் பெட்ரோக்கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான கருத்து எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை. தமிழகத்தில் அமைய இருக்கும் பெட்ரோக்கெமிக்கல் மண்டலம் கைவிடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான மத்திய அரசு கொடுத்துள்ள கோப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பெட்ரோலிய மண்டலம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகை மாவட்டங்களின் பெரும்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, மக்கள் வாழத்தகுதியற்ற நிலை ஏற்பட்டு விடும் என்பதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5&ஆம் தேதி சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசினேன். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க.  முன்னெடுக்கும் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் அத்திட்டத்தை செயல்படுத்தவிருந்த கடலூர் நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனம் திவாலாகிவிட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பெட்ரோல் கெமிக்கல் திட்டம் பற்றி ஒரு பார்வை:-

Image result for petro chemical

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில்  சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதற்காக அந்த கிராமங்களில் உள்ள 22,938 ஹெக்டேர், அதாவது 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி எண்ணெய் மற்றும் ரசாயன நிறுவனங்களுக்கு தாரை வார்க்கத் தீர்மானிக்கப்பட்டது. நாகார்ஜுனா குழும நிறுவனங்களில் ஒன்றான கடலூர் நாகார்ஜுனா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் தலைமையில் பல நிறுவனங்கள் ரூ.92,000 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்களையும், எண்ணெய்க் கிடங்குகளையும் அமைப்பது தான் திட்டத்தின் நோக்கமாகும்.

Image result for agri land

கடலூர் சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலை கழிவுகள் நிலத்தில் கலந்ததால் அங்கு விளையும் இளநீரிலும், நிலத்தடி நீரைக் குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் டையாக்சின் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பரங்கிப்பேட்டையில் சாயத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் அங்கும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 5 அனல் மின்நிலையங்கள் உள்ளதால் சுற்றுச்சூழலும், காற்றும் மோசமாக மாசுபட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெட்ரோக்கெமிக்கல் திட்டமும் செயல்படுத்தப்பட்டால் மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும். இதை அவர்களால் தாங்க முடியாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CENTRAL GOVT NEW INFERMATION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->