மண்ணில் புதைந்திருக்கும் ரகசியம், தோண்ட தோண்ட வியக்கும் அதிகாரிகள்..!! ஒரே ஆய்வில் தமிழகம் உச்சிக்கு சென்று விடும் என்பதால், இழுத்து மூட அதிரடி வேலைகள்.. - Seithipunal
Seithipunal


இனி ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ள எவ்வித  வாய்ப்பும் இல்லை   என்று மத்திய தொல்லியல் துறை அதிகார பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சி பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டறியபட்டுள்ளது

அகழ்வாராய்ச்சி பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சென்னை அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வராய்ச்சி பணி நடைபெற வேண்டுமென எழுத்தாளர் காமராஜ் என்பவர் ஹைகோர்ட்  மதுரைக் கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து வந்த ஹைகோர்ட் மதுரைக்கிளை ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது.

மேலும் இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்யவும், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் தொல்லியல்துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து இருந்தது

இதற்கிடையே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்து பதிலளித்துள்ள மத்திய தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள எவ்வித வாய்ப்பில்லை என பதில் கூறியுள்ளது

அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்வது என்பது மத்திய அரசின் கொள்கையை பொறுத்தது என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் சென்னை அருட்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt archealogy department stopped research in adichanallur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->