போலி மருந்து, மாத்திரைகளை தடுக்க மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஏப்ரல் 1 முதல் அமலாகிறது!! - Seithipunal
Seithipunal


வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளுக்கும் பார்கோடு அச்சிடப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், போலி மருந்து, மாத்திரைகளை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை  எடுத்து வருகிறது. அந்த வகையில், வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து மருந்து மற்றும் மாத்திரைகளில் பார்கோடு அச்சிடப்பட வேண்டும். 

அவ்வாறு அச்சிடப்பட்டும் பார்கோடில் மருந்தின் பெயர், தயாரிப்பாளர், சந்தை விலை, தயாரிப்பு, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பார்கோடு இல்லாத மருந்துகள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்வோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Government Announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->