இனி செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டு இருக்காது! வந்தது புதிய செயலி! விஜய் சேதுபதியுடன் அறிமுகம்! - Seithipunal
Seithipunal



சென்னையில் செல்போன் திருட்டு மற்றும் வாகன திருட்டை குறைப்பதற்காக போலீசார் ‘டிஜிகாப்’ எனப்படும் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கான தொடக்கவிழா நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டார். அவரது முன்னிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ‘டிஜிகாப்’ செல்போன் செயலி திட்டத்தை முறைப்படி அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்துகொண்டதால் இதனை அதிகப்படியான மக்கள் கூர்ந்து கவனித்தனர்.

மேலும், அந்த விழாவில் சிசிடிவி கேமரா தொடர்பான விழிப்புணர்வு பற்றிய குறும்படத்தின் சி.டி.யையும் போலீஸ் கமிஷனர் வெளியிட்டார். அந்த குறும்படத்தில், சாலமன் பாப்பையா, நடிகர் விஜய்சேதுபதி, நடிகை சினேகா, தொழில் அதிபர் ஐசரிகணேஷ், கானாபாலா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அதனை மக்கள் ஆர்வமாக கவனித்துவருவது வழக்கம். இந்த விழிப்புணர்வு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cell phone vehicles finder


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->