டன் கணக்கில் சிக்கிய குட்கா..! சிபிஐ நடத்திய அதிரடி சோதனை..!! - Seithipunal
Seithipunal


சிபிஐ அதிகாரிகள் குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். 

சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன உமாசங்கர் குப்தா, பங்குதாரர்கள் மாதவராவ், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் இருக்கின்றனர்.
 
கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் இன்று மீண்டும் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மேலும் மூன்று நாட்கள் அவர்களின் விசாரணை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI seized gutka from gudon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->