காவேரி விவகாரம்: சொன்னது போலவே கடலில் மூழ்கிய விவசாயிகள்..!! நாகையில் பரபரப்பு..!!! - Seithipunal
Seithipunal


காவேரிமேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் இன்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ள போவதாக, நாகை மாவட்ட விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று நாகையில் விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, தமிழக அரசும், மத்திய அரசும் காவேரிமேலாண்மை வாரியம் அமைக்கபடும் என்று சொல்லி, ஏமாற்றிவருகின்றனர், இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில், காவேரிக்கனா வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ள மத்திய அரசு, அதில் எந்த ஒரு இடத்திலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். என்று வாக்குறுதி கொடுக்கவில்லை.

எனவே, மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கியுள்ளது, என்று இன்று காலை கடலில் இரங்கி மூழ்க போவதாக அறிவித்தனர். இதை அறிந்த போலீசார், இன்று அதிகாலை புதிய கடற்கரையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மேலும் கடற்பகுதியில் போலீசார் அதிகளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

ஆனாலும், விவசாயிகள் நாகை அவுரி திடலில் பெருமளவில் திரண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என முழக்கமிட்டபடி கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் கைது செயத்தனர். தற்போது வரை, நாகையில் பதற்றமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CAVERY ISSUE FORMER SUICIDE PROTEST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->