தமிழகத்திற்கு விடிவு கிடைக்குமா..? கர்நாடக எம்பிக்கள் ஒன்னு கூடி எடுத்த முடிவு..? காவிரி நதிநீர் விவகாரத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


காவிரி விவகாரத்தில் உச்ச நீத்திமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்யப்போவது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

சட்டபேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.

அதனால் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவதற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், அந்தக் கட்சிகளுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை என்பதால், அவை தமிழக நலன்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

மாறாக, கர்நாடகத்தில் தங்கள் அரசியல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதைப் போல மத்தியில் ஆளும் கட்சிகள் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டிருந்தால் 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய உடனேயே அமைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அப்போது இல்லாவிட்டாலும் 2013-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட போதாவது மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.

அதன்பின் 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு அடுத்த 2 வாரங்களில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி வாக்குறுதி அளித்த போதாவது அது சாத்தியமாகியிருக்க வேண்டும்.

2016-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி அடுத்த 4 நாட்களில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட நேரத்திலாவது அதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.

நிலை இவ்வாறிருக்க முதல்வர் எடப்பாடியின் கணக்கு வேறு விதமாக இன்னும் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கர்நாடக அரசோ அனைத்து கட்சி கூட்டம் கூட்டி இறுதி தீர்மானமே எடுத்துவிட்டது. காவிரி விவகாரத்தில் உச்ச நீத்திமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்யப்போவது இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இன்று கர்நாடக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு திட்டத்தை வகுத்து நீர் விடவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மத்திய அரசிடம் கர்நாடக அரசு அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery issue: Center says four states have approved to implementation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->