தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்குள்ளேயே தீண்டாமை வன்கொடுமை!! மீண்டும் ஓர் சந்தையூர் தடுப்பு சுவர்!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே, சீயமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் அருந்ததியினர் இன மக்களுக்கு எதிராக அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே ஆதிக்கசாதியினராக இருக்கும் ஒரு சமூகதினர் செயல்பட்டு வருவது அருந்ததியின மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஆட்சியாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரின் மையபகுதியில், அருந்ததியர்கள் குடியிருப்பதால் மற்றொரு தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு கௌரவ குறைச்சலாக இருக்கிறதென்றும், அதனால் அருந்ததியர்கள் பயன்டுத்திய பொதுப்பாதை, குடிநீர் பம்பு போன்றவற்றை சேதப்படுத்தி தீண்டாமையைக் கடைபிடிக்கின்றனர்.

மேலும், கோவில் மதில்சுவர் என்ற பெயரில் கோவிலை சுற்றி சுவர் எழுப்பி பொது வழியை ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும், இதனால் அருந்ததியர் மக்கள் பொது வீதியில் நடமாட்டம் இல்லாமல் ஆகிவிடும்.இது நவீன தீண்டாமையாகும் என்று அம்மக்கள் வருந்துகின்றனர்.

மேலும், ' தொடர்ச்சியாக விளிம்பு நிலை மக்களான அருந்ததியர் மக்கள் ஜாதி கொடுமைக்கு ஆளாகும்போது மௌனமாக இருப்பது இங்கு பல சாதி ஒழிப்பு போராளிகளின் இயல்பாகிவிட்டது. இத்தகைய கடைநிலை தீண்டாமையை எதிர்த்து பேசாமல் இருப்பவர்கள் போலி சாதி ஒழிப்பு போராளிகள்.

தற்சமயம், பாதிக்க்கப்பட்ட மக்களுக்காக "ஆதித்தமிழர்பேரவை" மட்டுமே களத்தில் உள்ளது. மற்ற எந்தவொரு அமைப்பினரும், அல்லது தாழ்த்தப்பட்ட இனத்திற்காக குரல் கொடுப்போம் என கூறும் கட்சிகளோ இங்கு காணவில்லை' என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்ரனர்.

இதுகுறித்து, அருந்ததியினர் இன மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், பொதுப்பாதை, குடிநீர் பம்பு போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும், எங்கள் இந்த பெண்களை சீண்டும் விதமான வார்த்தைகளை கையாளுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

caste problem in seeyamangalam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->