இடியாப்ப சிக்கலில் எடப்பாடி...பேருந்து கட்டண உயர்வு குறித்து நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


இடியாப்ப சிக்கலில் எடப்பாடி...பேருந்து கட்டண உயர்வு குறித்து நீதிமன்றம் அதிரடி! 

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2011-க்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு கடந்த 19-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.அறிவிப்பு வெளியிட்ட அடுத்த 4 மணி நேரத்திற்குள் அமலுக்கு வந்த இந்தக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பல இடங்களில் பேருந்து நடத்துனருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனை வன்மையாக கண்டித்த தமிழக எதிர்க்கட்சிகள்,கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் அறிவித்துள்ளன.இந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கட்டண உயர்வுக்கு எதிராக திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவர், "பேருந்துக் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கட்டணத்தைச் சதவிகித அடிப்படையில் ஏற்றாமல், ஒரேயடியாக இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி இதனை இன்று மதியம் 2.30 மணிக்கு அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்த நீதிமன்றம்,  மனுவாகத் தாக்கல் செய்தால்,அந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பொதுவாக பொதுநல வழக்குகள் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்றாலும், பொதுமக்கள் நலன் கருதி இவ்வழக்கு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case field adainst bus fare hike madras HC action


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->