கஞ்சா விற்பதே சட்டவிரோதம்! அதை அரசு பள்ளி எதிரே கடைபோட்டு கஞ்சா விற்பனை!! - Seithipunal
Seithipunal


கஞ்சா விற்பதே சட்டவிரோதம். அதை கொண்டுபோய் அரசு பள்ளி எதிரே கடைபோட்டு விற்பனை செய்கிறார்கள் என்றால் இந்த சமூக விரோதிகளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? 

ராமநாதபுரம் ஒன்றியம் சித்தார்கோட்டை என்ற ஊராட்சி இருக்கிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உள்ள அரசு பள்ளிக்கு எதிரே உள்ள மைதானத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்து வருகிறது. 

அதுவும் பகலிலும், இரவிலும் என எந்நேரமும் தாராளமாக கஞ்சா இங்கு கிடைக்கிறது. கஞ்சா மட்டுமில்லை, அனைத்துவித போதை பொருட்களும் தங்கு தடையின்றி விற்கப்பட்டு வரட்டுகின்றனர். இதனை சமூக விரோதிகள் பள்ளிக்கு எதிரிலேயே இதை விற்பதால், மாணவர்கள் சீரழிந்து வருவதாகவும் அதனால் சமூக விரோத செயல்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டி வருன்றனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தமீம் ரகுமான் கூறும்போது, எந்நேரமும் கஞ்சா விற்பனை செய்யும் இந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு போலீஸ்யும், மாவட்ட ஆட்சித் தலைவரும் தகுந்த நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை புகார் அளித்துள்ளோம். 

ஆனால் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இளைஞர்களும், மாணவர்களும் சீரழிந்து வருவதால், பொறுக்க முடியாமல், நாங்கள் தற்போது, முதல் அமைச்சருக்கே புகார் மனு அனுப்பி வைத்து இருக்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canvas is sold at the government school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->