தமிழனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் கனடா பிரதமர் : தினேஷ் கார்த்திக்கு 5 கோடி பரிசு?பச்சை தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்க! - Seithipunal
Seithipunal


தமிழனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் கனடா பிரதமர் : தினேஷ் கார்த்திக்கு 5 கோடி பரிசு?பச்சை தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்க!  

தமிழர்கள் மீது தனி மரியாதை வைத்திருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து சென்றதிலிருந்து பெரும்பாலான தமிழர்களுக்கு மிக நெருங்கிய நண்பனாகவே மாறிவிட்டார்.அதற்க்கு உளவியல் ரீதியாக சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.அது, ஜஸ்டின் இந்தியா வந்திருந்த போது அவரை பிரதமர் மோடி முறையாக வரவேற்கவில்லை.

                             

தமிழக மக்களில் மோடி மீதான வெறுப்பு நேரடியாக ஜஸ்டின் மீதான பாசமாக மாறிவிட்டது அவ்வளவு தான் என்கிறார்கள் நிபுணர்கள்.ஆனால், அவ்வளவு எளிதாக ஒரு அந்நிய நாட்டு பிரதமருக்கு தமிழர்கள் மனதில் இடம் கிடைத்து விடுமா என்று கேட்டால்?ஆம், இன்றைய சமூகவலைதளத்தின் தாக்கம் அப்படி! என்றே கூறலாம். ஏனெனில், ஜஸ்டினின் இந்திய சுற்றுலாவின் போது தான் தமிழர்கள் மத்தியில் மிக பரிட்சயமாக மாறினார்.

                              

அதிலும் குறிப்பாக அவரது குட்டி பையன் செய்த சேட்டைகளை பெரிதும் விரும்பி ஷேர் செய்துள்ளனர் தமிழர்கள். இந்தநிலையில், தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ள ஜஸ்டினின் தாக்கம் தீராத மோகமாகவே மாறியுள்ளது.தற்போது தமிழர்களின் தலைவன் ஜஸ்டின் ட்ரூடோ என்று போட்டு “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” என போட்டால் போதும், இங்கு ஷேர்ஸ் அள்ளுகிறது.

                          

இது தற்போது எங்கு வந்து நிற்கிறது என்றால், தினேஷ் கார்த்திக் இந்திய அணியை வெற்றியடைய செய்துவிட்டார்; அவருக்கு கனடா பிரதமர் 5 கோடி ரூபாய் பரிசு என்று போட்டு ‘பச்சை தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்று வந்து நிற்கிறது.

                                   

இது இப்படியே போனால் சமூக வலைதள செய்திகள் மீதான நம்பகத் தன்மை கேள்வி குறியாக மாறுவது மட்டும் நிச்சயம்.#பச்சை தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada prime minister Justin Trudeau appreciate tamils


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->