அறுந்து விழுந்த டயர்.. கோவையில் அலட்சியத்தால் பறிபோன உயிர் - துடி துடித்து இறந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


உக்கடம் அரசு போக்குவரத்து கழகபணிமனையில் பணியின் போது தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை உக்கடம் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.கோவை கோட்டத்திற்குட்பட்ட இந்த பணிமனை 2ல் கணபதி என்பவர் கிளீனராக பணியாற்றி வருகிறார். இவர்  பேருந்திலிருந்து கயிறு கட்டி டயர்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து டயர்கள் கணபதி மீது விழுந்ததில்அவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பணிமனையில் இருந்த தொழிலாளிகள் கணபதியை சிகிச்சைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேருந்துகளின் மீது டயர்களை ஏற்றி இறக்க பல பணிமனைகளில் கிரேன் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால்இங்கு தொழிலாளிகளே கயிற்றின் மூலம்ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நடத்துனர் இல்லாத பேருந்து, மின்சார பேருந்து, பேட்டரி பேருந்து என விதவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான அறிவிப்புகளைஅரசாங்கம் வெளியிடுகிறது.

ஆனால் தொழிலாளிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில் எவ்வித நவீன உபகரணங்களை பெறுவதற்கு அக்கறையற்ற நிலையில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் உள்ளது.

இதன் காரணமாகவே தினம் தினம் ஆபத்தை எதிர்நோக்கியே தொழிலாளிகள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. தற்போது கணபதியின் மரணத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியமே பிரதான காரணமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus Tyre killed worker covai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->