கர்ப்பிணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர்…பஸ்சை சிறைப்பிடித்த உறவினர்கள்… - Seithipunal
Seithipunal


தர்மபுரியில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணுக்கு, அவது உறவினர்கள் சென்று வளைகாப்பு நடத்தி விட்டு, பின், அந்தப் பெண்ணுடன், 15 பேர் உறவினர்கள், நேற்று முன் தினம் ரயிலில், தர்மபுரியில் இருந்து ஈரோடு வந்தனர்.

அவர்கள் ஊட்டிக்குச் செல்ல வேண்டியவர்கள். அதனால், ஈரோட்டில் இறங்கி, டவுன் பஸ்ஸில் ஏறி, ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது நேரம் இரவு 9.30 மணி.

பஸ் ஸ்டாண்டில், கூட்டம் அதிகமாக காணப் பட்டதால், அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, சென்னிமலையில் இருந்து, மற்றொரு டவுன் பஸ் அங்கு வந்துள்ளது. அதன் டிரைவர், முன்னால் நின்றிருந்த இந்த பஸ்சை எடுக்கும் படி, ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார்.

ஆனால், பயணிகள் இறங்கிக் கொண்டிருந்ததால், முன்னால் இருந்த பஸ் டிரைவர் பஸ்சை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த சென்னிமலை பஸ் டிரைவர், பஸ்சை விட்டு இறங்கி வந்து, பயணிகளைத் திட்டி உள்ளார்.

இதனால், முன்னால் இருந்த பஸ்சை டிரைவர் எடுத்துள்ளார். பஸ்சுக்குள் கர்ப்பிணிப் பெண் உட்பட சிலர் இன்னும் இறங்கவில்லை. அதனால், பத்மாவதி என்ற பெண், டிரைவரிடம், கர்ப்பிணிப் பெண் இறங்குவதற்குள் பஸ்சை எடுக்கிறீர்களே…இது உங்களுக்கே நல்லா இருக்கா? என்று திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பஸ் டிரைவர், பஸ்சை விட்டு இறங்கி வந்து, கர்ப்பிணியின் உறவினர் பத்மாவதியை அடிக்க வந்துள்ளார். இதனை கர்ப்பிணைப் பெண் பார்த்து, டிரைவரைத் தடுத்தார்.

ஆனால், டிரைவர் அந்த கர்ப்பிணிப் பெண்ணையும் அடித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், பஸ்சை எடுக்க விடாமல் சிறை பிடித்தனர்.

பின், அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேசி, டிரைவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பின்பு கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BUS DRIVER ATTACK A PREGNANT LADY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->