ஒரே இரத்தம்.. இரண்டு கட்சி.. அதிர வைத்த அதிமுக - திமுக : தலை கால் புரியாமல் தவிக்கும் ஆண்டிப்பட்டி.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வேட்பாளராக ஆ.மகாராஜனும், அதிமுக வேட்பாளராக அவரது சகோதரர் லோகிராஜனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆண்டிப்பட்டியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

64 வயதான மகாராஜன் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 1996 -ம் ஆண்டு முதல் 2001 வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்துள்ளார். தற்போது, முத்தனம் பட்டி கிளை செயலாளர் மற்றும் ஆண்டிபட்டி ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 60 வயதான ஆ.லோகிராஜன், அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். டிரான்ஸ்போர்ட் மற்றும் பெட்ரோல் பங்க் தொழில் நடத்தி வருகிறார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்த அவர், ஆண்டிபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும், ரத்த உறவுகளை எதிர் எதிராக நிறுத்தி தேர்தலில் போட்டியிட வைப்பது எம்ஜிஆர், கருணாநிதி காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தான் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் அண்ணன் தம்பிகளை நிறுத்தி அரசியல் களத்தை சூடு பிடிக்க செய்துள்ளன அதிமுகவும், திமுகவும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brothers-contest-in-election-in-seperate-parties-in-same-place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->