முதல் முறையாக இலஞ்சம் கொடுத்தவருக்கு தண்டனை..! அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்..!! தமிழக மக்கள் பாராட்டு..!!! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்த நபர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை…..சபாஷ்…

லஞ்சம் வாங்குவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். லஞ்சம் கேட்டவர்களை, ரசாயனம் தடவிய பணத் தாள்களை வைத்து, லஞ்ச ஒழிப்புத் துறை இது வரை பிடித்து வந்தனர்.

லஞ்சத்தை ஒழிக்க பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மூவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, செப்டம்பர் 19-ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, லஞ்சம் கொடுத்ததாக, ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சுதாகர், முருகேஸ்வரன் மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் மீது, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இது தொடர்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் முடிவும் நேற்று அறிவிக்கப் பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சம்பத்குமார், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் மூவருக்கும் தால 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bribery case court in new judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->