ஐயோ..!! இப்படியுமா இருக்கு..?! கன்றாவி... பாலூட்டும் தாய்மார்கள் ஆதங்கம்..!! - Seithipunal
Seithipunal


பாலூட்டும் தாய்மார்கள் நலனை முன்னிட்டு தமிழகத்திலுள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் ஊட்டும் வாரமான ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனி அறைகள் தொடங்கப்படும்' என தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015 ஆம் ஆண்டில்  அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சில இடங்களில் தொடங்கப்பட்டு  இன்று தமிழகத்தில் பல பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

பணிபுரியும் மகளிர் தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொள்ளும் வகையில்  உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 

அதாவது, தாய்ப்பால் ஊட்டுவதில் பணிபுரியும் தாய்மார்களுக்கு உள்ள இடர்பாடுகளைக் களைவதன் மூலம் அவர்கள் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. 

தங்கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். 

எனவே, பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளைகளில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் அரசு பேருந்து முனையங்கள், நகராட்சி மற்றும் நகர பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும்' என்பதாகும்.

போதிய இடவசதி, வசதியாக அமர்ந்து பாலூட்டும் இறுக்கை, காற்றாடி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, பாதுகாவலர் என சகல வசதிகளோடும் இந்த பாலூட்டும் அறைகள் இருக்கும்.

இது பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசின் இந்த புதிய முயற்சியை மத்திய ரயில்வே நிர்வாகமும் பின்பற்றியது.

ஆனால் தற்போது சில பேருந்துநிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையில் ஃபேன், உட்கார போதுமான பெஞ்சுகள் இல்லாமல் தாங்கள் அவதிப்படுவதாகத் தாய்மார்கள் அல்லாடுகிறார்கள்.

கருர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரும் குழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் பெரும்பாதிப்படைந்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய அவர்கள், "பாலூட்டும் அறையைத் திறந்தாலும், போதிய லைட், மின்விசிறி வசதி கிடையாது.

முறையாக மின் வசதியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வச்சுட்டோம்.

இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுங்க, நாங்க அமர்வதற்குப் போதிய பெஞ்சுகளும் இல்லை.

தரையில் அமர்ந்து குழந்தைகளுக்குப் பாலூட்ட வேண்டியுள்ளது. அதோடு, நாங்கள் குடிக்கத் தண்ணீர் வசதி இல்லை. இதனால், பல நேரம் நாங்க அல்லாடிப்போகிறோம்' என்று தெரிவித்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

breastfeeding momes struggle in tn busstand


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->