வன விலங்குகளை வேட்டையாட வெடி குண்டு வீசியவர் கைது.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில், நேற்று முன் தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    
சேத்துார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், எஸ்.ஐ. முருகேசன் மற்றும் இதர போலீசார், அந்தப் பகுதியில் சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ஒரு பைக் மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
    
அந்த பைக்கில் இரண்டு வாலிபர்கள் இருந்தனர். போலீசார், அவர்கள் வண்டியை நிறுத்தி, வாகனத்தைச் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த பையில், 9 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
    
இது பற்றி, இருவரிடமும் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள், சுந்தர்ராஜபுரம் பி்ள்ளையார் கோயிலைச் சேர்ந்த குருவேந்திரன் (வயது 33) மற்றும் குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது.


    


அந்தப் பையை மேலும் சோதனையிட்ட போது, காடுகளில் பயன் படுத்தப்படும் டார்ச் லைட், மற்றும் ஒரு விலங்கின் மாமிசம் உள்ளிட்டவற்றையும், போலீசார் கைப்பற்றினர்.
    
போலீசார் இருவரையும் விசாரித்துக் கொண்டிருந்த போதே, குமார் என்பவர் தப்பி ஓடி விட்டார். பின், குருவேந்திரனைப் போலீசார் கைது செய்தனர்.
    
இவர்கள் இருவரும், ராஜபாளையத்தை ஒட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், நாட்டு வெடி குண்டுகளை வீசி, விலங்குகளை வேட்டையாடிக் கொன்றுள்ளனர், என்பது தெரிய வந்தது.
    
தப்பி ஓடிய குமாரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomber arrested for hunting wild animals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->