வங்கக்கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!! பெட்டி, படுக்கையுடன் வெளியேறும் மீனவர்கள்!! - Seithipunal
Seithipunal


சென்னையில் வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நேற்று மாலை கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம் காணப்படுகிறது.

கடலில் அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்ததோடு, பயங்கர சீற்றத்துடனும் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக நேற்று முன்தினம் மலையிலேயே விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

திருவள்ளுவர் சிலையை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அவசரமாக அழைத்து வரப்பட்டனர். இதே போல் நேற்று காலையிலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் பயங்கர சீற்றம் காணப்பட்டது. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுகளை ரத்து செய்தது.

இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், 2-வது நாளாக படகு போக்குவரர்த்து நிறுத்தப்பட்டது. பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் குகன், பொதிகை, விவேகானந்தா படகுகள் கரையில் ஓய்வெடுக்கின்றன.

கடல் சீற்றம் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், கோவளம், கீழ மணக்குடி, மேல மணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து சென்றனர்.

கட்டுமரம் மற்றும் வள்ளத்தில் கடலுக்கு செல்வோரும் இன்று பணிக்கு செல்லவில்லை. மேலும் விசைப்படகு மீனவர்களும் இனிய கடலுக்கு செல்லவில்லை. கடலின் சீற்றத்தை கண்டு, மீனவர்கள் கட்டுமரங்களை கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

இதேபோல கடற்கரை பகுதி முழுவதும் பயங்கர சூறைக்காற்றும் வீசியது. சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் முகத்தை மூடியபடி சென்றனர்.

இன்று அதிகாலையிலும் சூரியோதயம் பார்க்க சென்ற பயணிகள், அதன்பின்பு கடலில் குளிக்க சென்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா போலீசார் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boat ride cancelled in kanyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->