லிட்டர் கணக்கில் இரத்தம் கொடுத்த இளைஞர்கள் - மலைக்க வைக்கும் தமிழகத்தின் சாதனை..? ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பாடம் புகட்டிய தமிழினம்.! - Seithipunal
Seithipunal


இரத்த தானம் வழங்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயமாகும். இரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பது தமிழர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழக மக்களுக்கு இயல்பாகவே இரத்த தானம் செய்ய விருப்பமும், விழிப்புணர்வும் உள்ளது. அவ்வாறு இருக்கும் போது இரத்த தானத்தை கொடையாகப் பெற வேண்டுமே தவிர, கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது. அது இரத்த தானம் என்ற தத்துவத்தையே கொச்சைப்படுத்தும் செயலாகும்.

அதுமட்டுமின்றி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல இரத்தம் அதிகமாக பெறுவதும் ஆபத்தானது ஆகும். கொடையாக பெறப்படும் இரத்தத்தை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு மட்டும் தான் பாதுகாத்து வைக்க முடியும்.

இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டி பல இரத்ததான முகாம்களை நடத்தி, அதிலிருந்து இரத்தம் பெறப்பட்டு இரத்த வங்கிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு சிறப்பான முறையில் கையாளப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் இலக்கிய களம் சார்பாக நடைபெற்ற 7-வது புத்தக திருவிழாவில், மாவட்டத்தில் அதிக முறை ரத்த தானம் செய்த அமைப்பிற்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 67 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக இதுவரை 2 ஆயிரம் யூனிட் ரத்தம் வழங்கியுள்ளனர்.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மட்டும் 1500 யூனிட் ரத்தம் வழங்கி சாதனை புரிந்தனர். புத்தகத் திருவிழாவில் வாலிபர் சங்கத் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blood-donation-camp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->