ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தமிழக அரசு செய்த வேலை.!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்.   

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு நாமக்கல் சென்றார் கவர்னர்.  

இன்று காலையில் ஆளுநர்  பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு ஒன்று கூடிய தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிடவில்லை. இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் இது போன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க கவர்னரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் காவல்துறையினரின் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது. அதுபோல் கவர்னர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Block Flag Protest DMK party to Governor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->