அரியலூரில் திடீர் பரபரப்பு! ஒரு உயிருக்காக பல உயிரை காவு வாங்க தயாரான கொடூர சம்பவம்! இளைஞர் சிறையில் அடைப்பு! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் செந்துறை ரெயில் நிலையத்திற்கும் ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே பெரியாக்குறிச்சி பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு  இந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையை பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி தான் ரயில்வே பாதையை கடந்து சென்றனர். மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு சுரங்கப்பாதையை  கடந்து சென்று வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மழை  பெய்த காரணத்தால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கிவிட்டது.  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், உறவினர் வீடுகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அந்த வழியில் சென்றனர். அப்போது சுரங்கப்பாதையில்  அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்ததால் பாதையை கடக்க தயக்கமடைந்து சுரங்கப்பாதை அருகே அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பறந்து வந்து கொண்டிருந்தது. ரெயில் வருவதை அறியாத இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சி  செய்த போது ரெயில் அருகே வந்த சத்தம் கேட்கவே, பயத்தில் பதற்றமடையவே  இருவரும் உயிர் பிழைக்க மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலேயே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

அதிவேகமாக வந்த ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ரெயில் என்ஜினில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ என்ஜின் மற்றும் அதன் பின்னால் இருந்த 3 பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக சுதாரித்து கொண்ட  டிரைவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினர். ரயில் நின்ற பிறகு பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ரெயிலில் இருந்த தண்ணீரை கொண்டு என்ஜின் மற்றும் பெட்டிகளில் பற்றிய தீயை அணைத்தனர். 

பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதோடு ரயிலில் பயணித்த பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது. தொடர்ந்து டிரைவர்கள் என்ஜின் மற்றும் பெட்டிகளில் ஏதாவது பழுது ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகு ரெயிலை தொடர்ந்து இயக்கினர். இதன் காரணமாக பெரியாக்குறிச்சியில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. விருத்தாசலம் சென்றதும் என்ஜின் டிரைவர் நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் செய்து விசாரணை நடத்தினார்கள். 

மோட்டார் சைக்கிளின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரிக்கும் போது, மோட்டார் சைக்கிள் செந்துறை பகுதியை சேர்ந்த அன்பழகன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

big accident avoid in ariyalur because of level crossing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->