ஊட்டிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….! அவசரமாக ஊட்டியை விட்டுக் கிளம்பும் சுற்றுலாப் பயணிகள்….! - Seithipunal
Seithipunal


 

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், முன்பு எப்போதும் இல்லாத வகையில், தற்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா, மரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்கள் எல்லாம், மிலார் செடி கொண்டு மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகள் கருகத் துவங்கி உள்ளன. இவை கருகாமல் இருக்க, தென்னை ஓலைகள் மற்றும் தாவை, கோத்தகிரி மிலார் செடிகளைக் கொண்டு, விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

அதிகப் பனிப் பொழிவினால், காய் கறிகளும் வாடி வருகின்றன. இதனால், காலை, மாலை இரு வேளைகளிலும், ஸ்பிரிங்கலர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு, வருகின்றன.

தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது, தலைக்குந்தா, பைக்காரா, கிளின்மார்கண் ஆகிய பகுதிகளில், 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

அப்பர்பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் 1 முதல் 0 டிகிரி செல்சியசிற்கு, வெப்ப நிலை சென்றுள்ளது. மற்ற பகுதிகளிலும், 0 டிகிரி செல்சியசிற்கு வெப்ப நிலை செல்ல உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஊட்டியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும், அவசரமாக ஊட்டியை விட்டுக் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beware of ooty...!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->