வாழைப்பழத்தில் எத்திலின் காஸ்.. பொதுமக்களை அதிர செய்யும் ஸ்பிரே - மார்க்கெட்டில் அரங்கேற்றப்படும் விபரீத நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் வாழைத்தாருக்கு ஸ்பிரே அடித்து பழுக்க வைப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனைஎன்ற பெயரில் நாடகத்தை நடத்தியுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் பாசன வாய்க்கால் வசதி உள்ளதால் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் வாழை,கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாழை பழங்கள் மனிதர்கள் உண்ணுவதற்கு உகந்ததல்ல.

எனவே, இனி வரும்காலத்தில் பரிசோதனை செய்தே வாழைத்தார்களை வாங்குவோம் என கேரள அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு கோபி, கொடுமுடி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் தினசரி 10 லாரி முதல் 15லாரிகளில் 400 டன் வாழைத்தார் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்தவாழைத்தாருக்கு ஒரு வகையான கெமிக்கலை ஸ்பிரே மூலம் அடித்து பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது.

புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், நேதாஜி மார்க்கெட் சென்று, கனி மற்றும் பழ வகைகள் சங்க அலுவலகத்துக்கு வியாபாரிகளை அழைத்து பேசினர்.

மேலும், வாழைத்தார் வைக்கப்பட்டுள்ள இடங்களை மற்றும் குடோன்களில் சோதனை செய்தார். சோதனையில் கெமிக்கல் வாழைத்தார் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தொடர்ந்து இது போன்றபுகார்கள் எழுந்தால் நாடகம் நடத்துவது போல 5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் மார்கெட் பகுதிகளில் சில இடங்களில் சோதனைநடத்துகிறார்கள

அவ்வாறு நடந்து முடிந்ததும் ரசாயனம் கலந்த வாழைத்தார்கள்இல்லை என கூறி வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் இது வரை ஒரு இடத்தில் கூட பிடிக்க முடியவில்லை என உணவுபாதுகாப்பு அதிகாரிகளை பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

இந்த சோதனை குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணிகூறுகையில், வாழைத்தாரில் கார்பைடுகல் மற்றும் 100 பிபிஎம்-க்கு மேல் எத்திலின் காஸ் ஸ்பிரே மூலம் பழம் பழுக்கவைப்பதன் மூலம்வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற நோய் ஏற்படும்.

பர்மிட் உள்ள வாழைத்தார் குடோன்களில் 100 பிபிஎம் எத்திலின் காஸ் பயன்படுத்த அனுமதி உள்ளது. அதற்கு மேல் அடித்ததால் நோய் வர வாய்ப்புள்ளது. அனுமதிக்கு மேல் எத்திலின் காஸ் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banana chemical spray


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->