சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய கிராமம்.!! - Seithipunal
Seithipunal


சேலம் சென்னை இடையே, 8 வழிச்சாலை அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, பல விவசாய நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. இந்த சாலை வேலைகளினால், தங்கள் நிலங்களை பறி கொடுத்தவர்கள், இந்த எட்டு வழிச் சாலை திட்டத்தினை கடுமையாக எதிர்த்தனர்.

அதிமுக, பாஜக-வை தவிர தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் இந்த 8 வழி பசுமை சாலையை எதிர்த்துவருகின்றன. இது சம்மந்தமான வழக்குகளில் மத்திய, மணிலா அரசுகளுக்கு நீதிமன்றம் சரமாரியாக தனது கேள்விகளை முன் வைத்துள்ளது. மத்திய அரசும் இந்த 8 வழி சாலைக்கு சரியான விளக்கத்தை தராமல் காலம் தாழ்த்திவருகிறது.

விவசாய நிலங்களைப் பறி கொடுத்தவர்கள், நீதி மன்றத்தில் முறையீடு செய்தனர். நீதி மன்றம், எட்டு வழிச்சாலை அமைக்க இடைக்காலத் தடை விதித்தது. தற்போது, மீண்டும், அந்த எட்டு வழிச்சாலையை உருவாக்குவதற்காக, கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுாற்றுக் கணக்கான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தின் விவசாயிகள், தங்களது குடும்பத்தோடு ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். 

இந்த 8 வழிச்சாலை விஷியத்தில் யாரோ ஒருவர் சொன்னது தான் நமக்கு நினைவில் வருகிறது, ''ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல் படுத்தும் பொது மக்களின் பேராதரவோடு அந்த திட்டத்தை நிறைவேற்றினால் அங்கு ஜனநாயகம் சிறப்பாக செயல்படுகிறது என்று அர்த்தம். காரணம், அந்த திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் உயர்த்தும் என்று பொருள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban 8 way road people fasting protest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->