அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய திருப்பம்!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


சென்னை அயனாவரத்தில் சேர்ந்த காதுகேளாத 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

கடந்த 18.07.2018 அன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 17 பேரையும், சென்னை ஐகோர்ட் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 23 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, விசாரணையின் போது ஒவ்வொரு நபரையும், அவரது பெயரை சொல்லி அடையாளம் காட்டினார்.

இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aynavaram Child Case Gundar Sattam high Court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->