நீங்க ஒருவர் உண்டால், சந்ததியே பலியாகும்..! உஷாராக இருங்க, மார்கெட்டில் மலிவு விலை என்று வாங்கிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன்.எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு கூறப்படுகிறது.

கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுகிறது.

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு ராட்சஷதனமாக வளரக்கூடியது.

இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள். இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை

இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் தேவையற்ற குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டையில் கொட்டப்படுகின்றன .

இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, நம் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது

இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு  செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை, நம்மில் பலருக்கும் இது குறித்து விழிப்புணர்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..இது நம் மரபுகளை பாதிக்கும் என்பதால்,   இதை அனைவரது  கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

awareness to e


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->