ஷவரில் குளிப்பவர்களும், வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துபவர்களும் மறக்காம இதை செய்யுங்க!!  - Seithipunal
Seithipunal


குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், அதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன், "கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனது இதன் காரணமாக பூண்டி புழல் சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதில் சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் வறண்டு காணப்படுகிறது. புழல் ஏரியில் இருந்தும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருக்கும் முடியும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஷவரில் குளிப்பது ஆனந்தமாக கருதுகின்றனர். இதனால் தண்ணீர் அதிக அளவில் வீணாகும். குளிக்கும்போது நம்மை மறந்து அதிக நேரம் ஆனந்த குளியலில் மூழ்கிவிடுவோம். 40 முதல் 50 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது.

பக்கெட்டில் தண்ணீர் செய்து குளித்தால் 5 முதல் 8 லிட்டர் மட்டுமே தேவைப்படும். தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தீரும் வரை சபதத்தில் குளிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் அதேபோல் வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தினாலும் அதனை சுத்தம் செய்ய 5 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் வீணாகிறது.

இதனால் இந்திய முறை கழிப்பறைகளை பயன்படுத்தினால் ஒரு லிட்டர் கள் சுத்தம் செய்து விட முடியும் தண்ணீர் பற்றாக்குறை தீரும் வரை western டாய்லெட்டுக்கு விடுமுறை தர வேண்டும். சிலர் தங்களது கார்களை தினசரி கழுவி கொண்டுள்ளனர். இதனால் 50 முதல் 70 லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

எனவே தண்ணீர் கிடைக்கும் வரை ஈரத்துணியை கொண்டு காரை துடைத்து விடலாம். வீட்டு செடிகளுக்கு குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீரை அடிப்பதை தவிர்க்கவேண்டும். ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பெறப்படும் உப்பு கலந்த தண்ணீரைப் பயன்படுத்தினால் நல்லது. அதுபோல வீட்டை சுத்தம் செய்யவும் உப்பு கலந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

awareness for chennai peoples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->