ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் அவனியாபுரம்…! களை கட்டுது….! சுறுசுறுப்புடன் காத்திருக்கும், வீர இளைஞர்கள் பட்டாளம்….! - Seithipunal
Seithipunal


 

ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன மதுரையில், இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லுார், பாலமேடு ஆகிய பகுதிகளில், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஜல்லிக்கட்டு, ஜனவரி 14-ஆம் தேதி, மதுரை அவனியாபுரத்தில், துவங்க உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு, யாருக்கு முதல் மரியாதை தருவது? என்பதில், சில பிரச்சினைகள் இருந்து வந்தது.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

இந்த விழாவில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது, என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

நீதிபதியும், மாவட்ட கலெக்டரும், ஜல்லிக்கட்டை துவக்கி வைக்கிறார்கள்.

இதனால், தற்போது, இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், படு உற்சாகத்துடன், காளைகளாக, காளைகளுடன் வலம் வருகின்றனர். ஜல்லிக்கட்டு விழாவிற்காக, அவனியாபுரம் ஏரியா களை கட்டி வருகிறது.

இதனைப் பார்ப்பதற்காக, வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளும், மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தெறிக்க விடக் காத்திருக்கிறார்கள், வீர இளைஞர்கள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avaniyapuram prepare for Jallikattu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->