அரியலூர் போலீஸ் தற்கொலை!! கொலையா? தற்கொலையா?! சந்தேகிக்க வைக்கும் சாட்சியங்கள்!!  - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன் ஒன்று இருக்கின்றது. இங்கு சுமார் இங்கு 100க்கும் மேற்பட்ட பல போலீஸ்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள காவலர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் நெடுங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்து (30) என்பவர் எங்கு தங்கி பணிபுரிந்து வாட்நத்துள்ளார். அவர்  இன்று காலை தங்கியிருந்த அறையின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று உடலை கைப்பற்றி சோதனை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முத்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று எந்த விஷயமும் தெரியாமல் குழம்பி போய் போலீசார் இருந்தனர். ஒருவேளை உயர் அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக இருக்குமோ? அல்லது குடும்பமா? என அலசி ஆராய்ந்தனர்.

மேலும், முத்துவின் கழுத்தில் கத்தி காயங்கள் ஏற்பட்டுள்ளது. கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும், பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதுமாக போலீசாரை நம்ப வைக்கும் விதமாக இது அமைந்துள்ளது. 

மேலும், அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார், அதில், " என் சவுக்கு யாரும் காரணமில்லை" என கூறியிருப்பதாக தெரிகிறது. உண்மையில் இது தற்கொலை தானா? இது அவர் எழுதிய கடிதம் தானா? என்றும்,

கத்தி காயங்கள் கொல்லப்பட்டு பின் தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur young police suicide in trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->